உண்டியலை உடைக்கும் போது வசமாக சிக்கிய திருடன்| இலங்கை செய்திகள்

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
இதனை SHARE பண்ணுங்க

உண்டியலை உடைக்கும் போது வசமாக சிக்கிய திருடன்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன ஊறணி பேச்சியமன் ஆலய உண்டியலை உடைத்து திருட முற்பட்ட இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இரவு 11 மணியளவில் சின்ன ஊறணி பேச்சியமன் கோயிலில் சத்தம் கேட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த பகுதி

மக்களை ஒன்றிணைத்து வந்த போது, உண்டியலை கல்லால் அடித்து உடைக்க முயற்சித்த ஒருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

உண்டியலை உடைக்கும் போது வசமாக சிக்கிய திருடன்| இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் எனவும், இவருக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற பிணையில் வெளிவந்தவர் எனவும் இவரை ஞாயிற்றுக்கிழமை (26)

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்திய போது இவரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


இதனை SHARE பண்ணுங்க