உணவு இன்றி இறந்த அகதிகள் சடலங்கள் மீட்பு
சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமகாக
வருகை தந்த 27 அகதிகள் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
துனிசியாவின் எல்லைக்கு அருகிலுள்ள நாட்டின் மேற்கு பாலை வனத்தில் இறந்துள்ளனர் என்று லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
உணவு இன்றி இறந்த அகதிகள் சடலங்கள் மீட்பு
லிபியாவின் உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் எல்லைக்கு அருகில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், தடயவியல் குழு அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார் . படங்களை அமைச்சகம் வெளியிட்டது.
லிபியா அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஹமூடா சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார், ஆனால் மேலதிக விவரங்களை வழங்க மறுத்துவிட்டார்.
இவர்கள் உண்வு மற்றும் நீர் இல்லாமையால் இருந்துள்ளதாக கண்டு பிடிக்க பட்டுள்ள செயல் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .