
உணவகங்கள் சுற்றி வளைப்பு
வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்குட்பட்ட உணவகங்களில் திங்கட்கிழமை (17) திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் சுமார் 48 உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன.
அதில், சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட 19 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், 6 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.