உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்

Ring Video Doorbell பாதுகாப்பு கமரா

உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்

உக்ரைன் காபி ஷாப்களில் உள்ள தனியார் பாதுகாப்பு கேமராக்களில்
ரஷ்ய ஹேக்கர்கள் நுழைந்து, அந்த வழியாக செல்லும் உதவித் தொடரணிகள்
பற்றிய உளவுத் தகவல்களைச் சேகரித்துள்ளனர் என அமெரிக்கா பாதுகாப்பு
அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

ரஷ்ய அரசு மற்றும் அரசாங்க ஆதரவு ஹேக்கர்கள் உக்ரேனிய
தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர் .

இங்கு உள்ள கமராக்கள் மற்றும் அங்கு உள்ள நடமாட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து
ஒட்டு கேட்டு ,அதன் ஊடாக உக்ரைன் இராணுவத்தினரை இலக்கு வைத்து
தாக்குதல் நடத்தி வருவதான தகவல் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

அண்மையில் நடந்தேறிய ஏவுகணை கிடங்குகள் அழிப்பும் .
இவ்வாறான தகவல்கள் மூலம் பெற்றுள்ளதகா தெரிவிக்க படுகிறது .

உக்ரைன் கமராக்களை கைக்கிங் செய்த ரஷ்யா கைக்கர்கள்

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கி
ரஷ்யா படைகள் 500 பேர் பலியாகியும் , 7 டாங்கிகள், 10 கவச வண்டிகள்
15 பீரங்கி ,ஒரு பல்குழல் ஏவுகணை செலுத்தி , 1 ஹெலிகாப்டர்,
9 ஆளில்லா வான்வழி விமானங்கள்,
13 வாகனங்கள் மற்றும் எரிபொருள் தாங்கிகள்ஆகியவற்றை இழந்துள்ளது என உக்ரைன் இராணுவவம் வழமையான ஊடகஅறிக்கையில் தெரிவித்துளளது .

எனினும் தமக்கு ஏற்பட்ட இழப்பு விகிதங்களை, இன்றும் தெரிவிக்கவில்லை .,
கடும் மோதல்கள் இடம்பெறுவதை மட்டும் ஒப்பு கொண்டுள்ளது .