ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
Spread the love

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோர்க்கர் டர்க் இலங்கை தொடர்பான தனது வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் புதிய பொறிமுறையொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ள போதிலும், உண்மையைக் கண்டறிவது மட்டும் போதாது எனவும், குற்றவாளிகளை தண்டிக்க போதுமான பொறிமுறையை வழங்குவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் வலியுறுத்துகிறார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டம் குறித்த பல சரத்துக்கள் தொடர்பில் தனது அறிக்கையில் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கையின் ஆட்சியில் வரலாற்று ரீதியிலான மாற்றம், கடந்த கால மக்கள் எதிர்ப்புக்களில் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என்றும், இதன் காரணமாக நீண்டகால சவால்களுக்கு தகவல் வழங்குவது மேலும் தாமதமாகி வருவதாகவும் ஆணையாளர் வருடாந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்ந்தும் பொறுப்புக்கூறல் இன்றி செயற்பட்டு வருவதாகவும், அண்மைக்காலமாக மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் நாட்டில் காணப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது வருடாந்த அறிக்கையில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதிப்படுத்துதல், ஊழலுக்கு எதிராக செயற்படுதல் மற்றும் நீதியை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.

ஆழமான நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளில் முன்னேற்றத்தை அடைவதில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மற்றும் இந்நாட்டு அரசியல் கட்சிகள் இதனை அவசரத் தேவையாகக் கருத்தில் கொண்டு செயற்படுமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோர்க்கர் டர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.