
ஈச்சிலம்பற்றில் ஆணின் சடலம் மீட்பு
திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று திங்கட்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (35வயது) எனவும் தெரியவருகிறது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியதாகவும், மற்றைய இருவரும் வீடுகளுக்கு சென்றதாகவும் குறித்த நபர் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
ஈச்சிலம்பற்றில் ஆணின் சடலம் மீட்பு
உயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்படுவதாகவும் சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் சென்று
பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் அவருடன் மது அருந்திய நபர்களை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்
- இலங்கைக்கு 2 விமானங்களை வழங்கிய சீனா
- சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்
- சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது
- இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
- 21 வயதில் பட்டம் பெறும் வாய்ப்பு
- இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்
- போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு
- சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்
- ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்
- மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு