
இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்றபட்ட இலங்கை பெண்கள்
ஜோர்தானில் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக பிரவேசித்த போது கைது செய்யப்பட்ட 2 இலங்கை பெண்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்னர் இலங்கையர்கள் என்று கூறப்படும் 2 பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
50 வயதான ஜே.ஏ. ஷமிலா துஷாரி மற்றும் 44 வயதான கே.ஏ. ஸ்ரீயானி மஞ்சுளா குலதுங்க எனப்படும் பெண்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முற்றபட்ட இலங்கை பெண்கள்
இந்நிலையில், ஜோர்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்த 2 பெண்களையும் ஜோர்தானுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்தப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்
- இலங்கைக்கு 2 விமானங்களை வழங்கிய சீனா
- சட்டக் கல்வியை தமிழில் தொடர வேண்டும் ஸ்ரீதரன்
- சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது
- இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
- 21 வயதில் பட்டம் பெறும் வாய்ப்பு
- இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்
- போலி கல்வி நிறுவனத்தை நடத்திய பெண் பிணையில் விடுவிப்பு
- சென்னைக்கான விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்
- ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்
- மாணவர்களின் கல்வியாண்டு ஓராண்டு குறைப்பு