இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு

இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Spread the love

இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு

இலங்கை மின்சார சபை இன்று (20) முதல் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்றுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்டணமானது ஒக்டோபர் 20, 2023 முதல் ஜூன் 30, 2024 வரை அமுலில் இருக்கும்.

இலங்கை மின்சார சபை மின் கட்டணம் அதிகரிப்பு

மின் கட்டணத்தை 18 சதவீதம் உயர்த்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வருடத்தில் இவ்வாறு மின் கட்டணம் உயர்த்ப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.

ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கை மக்களின் மேல் மேலும் சுமையை சுமத்தும் வகையில் இந்த மின் கட்டண அதிகரிப்பு காணப்படுகின்றது.