இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இதனை SHARE பண்ணுங்க

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2021 டிசம்பர்17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.


    இதனை SHARE பண்ணுங்க

    Author: நலன் விரும்பி

    Leave a Reply