இலங்கை தமிழர்கள் 6 பேர் கைது

இலங்கை தமிழர்கள் 6 பேர் கைது

இலங்கை தமிழர்கள் 6 பேர் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேர் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மன்னார், எருக்குழும்பிட்டி கடற்பகுதியில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 06 பேருடன் டிங்கி படகு ஒன்றை கைப்பற்றினர்.