இலங்கையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் பல மாவட்டங்களில் பதிவாகிய கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, மொனராகலை, குருநாகல் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1.2 – 1.5 இடைப்பட்ட வீதத்தால் அதிகரித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 3 – 5 இடைப்பட்ட வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், கொவிட் மரணங்கள்; 5 வீதத்தால் குறைந்துள்ளன.

இவ்வாறு கொவிட் மரணங்கள் குறைவாக பதிவாவதற்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

தற்போது நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 74 வீதமானோருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 62 வீதமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும்; வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 14 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

Author: நலன் விரும்பி

Leave a Reply