இலங்கையில் இருந்து ஐரோப்பாவிற்கு மீளவும் விமான சேவைகள் ஆரம்பம்
இலங்கைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமான சேவை சங்கத்துடன் கலந்துரையாடி இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த விமான சேவைகளை மீள ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.