இறைச்சியுடன் உயர் அதிகாரியொருவர் கைது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Spread the love

இறைச்சியுடன் உயர் அதிகாரியொருவர் கைது

வனவிலங்கு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி மிக நீண்ட நாட்களாக மாடுகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை பொதியாக்கி தனது மனைவியின் வீட்டிலுள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை

செய்து வந்த தெஹியத்தக்கண்டிய சிவில் பாதுகாப்பு திணைக்கள பாதுகாப்பு உத்தியோஸ்தர் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளினால் செவ்வாய்க்கிழமை (24) திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டியில் தனித்தனியாக ஒவ்வொரு

கிலோவாக பொதி செய்யப்பட்டிருந்த 7 கிலோகிராம் இறைச்சியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.