இறைச்சிக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்

இறைச்சிக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்
Spread the love

இறைச்சிக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்

செவனகல, நலசிறிகம பிரதேசத்தில் இறைச்சிக்காக மிருகங்களை வேட்டையாடும் நபர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் இருவர் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உடவலவ வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உடவலவ தேசிய பூங்காவின் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் இரு உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இறைச்சிக்காக அதிகாரிகள் மீது தாக்குதல்

குறித்த குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது மிருகங்களின் தலை, இரண்டு துப்பாக்கிகள், இரண்டு ரைபிள் தோட்டாக்கள், குளிர்சாதனப் பெட்டி,

சைக்கிள், யானைத் தோல், இறைச்சி வெட்ட பயன்படுத்தியதாக கூறப்படும் மூன்று கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்