இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் 57 வயதான நபர் கைது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Spread the love

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் 57 வயதான நபர் கைது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை (taJ 57) மொனராகலை பொலிஸாரால் வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்..

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரகெட்டிய பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் மொனராகலை மதுரெகெட்டிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கள அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.

அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த இவர், மதுருகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் சில காலமாக அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இரண்டு சிறுமிகளின் தாயும் தந்தையும் கூலித்தொழிலாளர்களாக வாழ்ந்து வருவதுடன், வீட்டில் இருந்து வெளியில் சென்ற போது சந்தேகநபரால் இரண்டு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் 57 வயதான நபர் கைது

சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.