இராணுவ வீரரின் கின்னஸ் உலக சாதனை முயற்சி

இராணுவ வீரரின் கின்னஸ் உலக சாதனை முயற்சி
Spread the love

இராணுவ வீரரின் கின்னஸ் உலக சாதனை முயற்சி

கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியாக 14 நாட்கள் இரவு பகல் ஓய்வின்றி தொடர்ச்சியாக இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள சாதனை நடைபயணத்தை இலங்கை இராணுவ வீரர் ஒருவர் பருத்தித்துறை-சக்கோட்டையில் இருந்து நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் பலாலி படைமுகாமில் கடமையாற்றும் சமிக்ஞைப் படைப்பிரிவை சேர்ந்த கீர்த்திரத்ன என்ற இராணுவ வீரரே உலக சாதனை நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.

நேற்று முன்தினம் (05) மாலை 06 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து அரம்பித்துள்ள உலக சாதனை நடைபயணம் வரும் செப்டெம்பர் – 18 ஆம் திகதி தெய்வேந்திரமுனையில் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.