இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

மொரட்டுவ பிரதேசத்தில் இராணுவ வாகனம் மோதியதில் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான வாகனம் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதிய பின்னர் வீதியில் பயணித்த பெண்ணின் மீது மோதியிருந்தது.

பலத்த காயம் அடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வாகனத்தை ஓட்டிச் சென்ற இராணுவ சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.