இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை பகுதியில் ஒய்வு பெற்ற இராணுவமேஜர் வீட்டில் 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற திருடன் ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

குறித்த பிரதேசத்திலுள்ள ஒய்வு பெற்ற இராணுவ மேஜர் வீட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ம் திகதி வீடடில் அனைவரும் இருந்துள்ள நிலையில் அங்கு வந்து சென்ற நபர் அங்கிருந்து தங்கசங்கலி காப்பு, தோடு என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்

இந்த நிலையில் பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் திருடனை நேற்று கைது செய்துள்ளனர்.

திருடப்பட்ட தங்க ஆபரணங்களை திருடன் நீர் கொழும்பில் உள்ள அடகு கடைகளில் அடகு வைத்து 5 இலச்சத்து 50 ஆயிரம் ரூபாவை

பெற்றுள்ளதாகவும் அவற்றை கைப்பற்றுவதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை
பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.