இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்று 241ஆம் இராணுவ படைப்பிரிவு முகாமின் தேனீர் சாலை முன்பாக இன்று (05) அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இக்கார் வீதியை விட்டு விலகி, வீதி அருகில் இருந்த சிறிய தூண்களை உடைத்துக்கொண்டு, அருகில் இருந்த சிறிய பள்ளமான பிரதேசமொன்றில் தலை கீழாக வீழ்ந்து கிடப்பதை காண முடிந்தது.

காரின் இரு பக்க இலக்கத்தகடுகளும் காணப்படாத நிலையில், காரின் முன்பகுதி மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதையும் காரின் சில பாகங்கள் சிதறி கிடப்பதையும் அவதானிக்க முடிந்தது.

இதில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார், இன்று காலை குறித்த இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.