
இராணுவ சிப்பாய் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| பனாகொட இராணுவ முகாமில் நேற்று (24) இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ வீரர் தனது உத்தியோகபூர்வ ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட இராணுவ வீரர் 32 வயதுடையவர் எனவும், இவர் மாத்தளை – நாவுல பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.