இராணுவ சிப்பாய் தற்கொலை

இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
Spread the love

இராணுவ சிப்பாய் தற்கொலை

அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை பழக்கத்திற்கு ஆளான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். பின்னர் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இராணுவ சிப்பாய் தற்கொலை

அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் சத்தியசீலன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலமானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது