இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்

இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்
Spread the love

இரண்டு வாகனங்களை பந்தாடிய லேண்ட் ரோவர்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |அதிக வேகத்தில் பயணித்த லேண்ட் ரோவர் வாகனமொன்று, வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கரவண்டியை பந்தாடி பதம் பார்த்துவிட்டு பஸ்தரிப்பிடத்தில் முட்டிமோதி நின்றுள்ளது.

ஹட்டன்-டிக்கோயாவில் இருந்து நோர்வூட் வரையிலும் அதிவேகத்தில் பயணித்த லேண்ட் ரோவர் வாகனமே டிக்கோயா- வனராஜா பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேலே குறிப்பிட்ட இரண்டு வாகனங்கள் மீது மோதிவிட்டு, பஸ்தரப்பிடத்தையும் பதம் பார்த்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த லேண்ட் ரோவரின் சாரதியும் மற்றுமொருவரும் ​டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (01) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், லேண்ட் ரோவரின் சுக்கான் திடீரென செயற்பட மறுத்தமையை அடுத்தே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.