இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
Spread the love

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்


இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை மந்திரி சபையில் உள்ள தோஷகானா என்ற துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.