இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா
Spread the love

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

இப்படி இட்லி செய்தா 10 இட்லி ஒன்றாக சாப்பிடலாம் .அப்புறம் என்ன செய்து சாப்பிடுங்க மக்களே .

மிகவும் இலகுவான முறையில் தரமான சுவையில் ,அடுத்தே வீடே வீடு தேடி வரும் சுவையோ சுவையில் செய்து அசத்துங்க மக்களே .

இட்லி குருமா செய்வது எப்படி .

அடுப்பில கடையா வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க ,எண்ணெய் சூடானதும் ,சோம்பு ,கராம்பு ,பட்டை ,அன்னாசி பூ ,வெங்காயம் போட்டு வதக்கி வாங்க .


வெங்காயம் வதங்கிய பின்னர், தக்காளி ,கருவேப்பிலை ,பச்சை மிளகாய் ,பூண்டு ,இஞ்சி ,எல்லாம் சேர்த்து வதக்கி கொள்ளுங்க ..

நன்றாக வதங்கிய பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி வந்த பின்ன ,அடுப்பை நிப்பாட்டி கொள்ளுங்க .

இப்படி செய்தா 10 இட்லி கூட சாப்பிடலாம் | இட்லி தோசைக்கு ஏற்ற குருமா

சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு, தண்ணி சேர்த்து அரைத்து கொள்ளுங்க .

அதே கடாயில எண்ணை ஊற்றி, சோம்பு பெரிய வெங்காயம் போட்டு வதக்கி கொள்ளுங்க .

அதன் பின்னர் தக்காளி கருவேப்பிலை போட்டு வதக்கி கொள்ளுங்க .


அப்புறமாக அரை கரண்டி மஞ்சள், மல்லி தூள் , கார தூள் போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி வாங்க .
இது கூடவே அரைத்த மாசாலாவை போட்டு வதக்கி வாங்க .

தேவையான அளவு தண்ணி ஊற்றி நன்றாக கலக்கி, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்த பின்னர் ,கொத்த மல்லி இலை போட்டு இறக்கி கொள்ளுங்க .
இப்போ சூடான சுவையான குருமா ரெடியாடிச்சு .

இதனை இட்லி கூட இந்த குருமாவை போடு ஒரு புடி புடிச்சு பாருங்க .செமை சுவையாக இருக்கும் .அம்புட்டு தாங்க .வேலை .

அப்புறம் என்ன இன்றே வீட்டில சமைத்து பாருங்க மக்களே .