இனியேனும் மனிதனாய் வாழு

இனியேனும் மனிதனாய் வாழு
Spread the love

இனியேனும் மனிதனாய் வாழு

பதிவைத்து சதி செய்து
பலி கொண்டாய்
பகிடிகள் செய்தவன்
இழி கொண்டாய்

வெள்ளையன் நீ என்ற
திமிர் கொண்டாய்
வேண்டாதான் தமிழ் என்றே
நீ கொன்றாய்

தூதனாய் ஏன் அன்று
நீ வந்தாய்
துரோகங்கள் செய்தேன்
அவன் கொன்றாய்

இன்றேனோ மீள
நீ வந்தாய்
இன்றெங்கே குழிவெட்ட
நீ போறாய்

நோர்வையின் சொல்கெமே வெளியேறு
நொந்தவர் சொல்கிறார் காணு
இன்றேனும் இழிநிலை தூரு
இனியேனும் மனிதனாய் வாழு ..!