இனப்படுகொலையை தடுப்பதற்கு நீதி- வி.உருத்திரகுமாரன் !

Spread the love
இனப்படுகொலையை தடுப்பதற்கு நீதி- வி.உருத்திரகுமாரன் !

இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான அனைத்துலக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள்,

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் நிறுத்தி, தமிழினப்படுகொலைகக்கு நீதியினை நிலைநாட்ட

பாடுபட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா உடன்படிக்கையின் 71வது ஆண்டினை (Dec 9


Genocide Convention and the International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide and the Prevention of this Crime) முன்னிட்டு,

தனது ருவிற்றர் பதிவில் இக்கருத்தினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலைக்கு உள்ளாகி பலியாகியவர்களை நினைவு கொள்கின்ற நாளாகவும் ஐ.நாவின் இந்நாள் பிரகடனம் அமைகின்ற நிலையில்,

தனது நினைவுவணக்கத்தினை பதிவு செய்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழினப்படுகொலையினை புரிந்தவர்கள் தண்டிக்கபட்டு,

தமிழர்களுக்கான ஈடுசெய் நீதி சர்வதேச நீதியினால் வழங்கப்பட வேண்டும் எனவும் பதவிட்டுள்ளார்.

இவ்வாறான சர்வதேச உடன்படிக்கைகள் பேச்சளவில் இல்லாது, அவைகள் காத்திரமான செயல்முனைப்பு

கொண்டதாக அமைவதுதான், உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினைப் பெற்றுத்தரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை டிசெம்பர் 10 அனைத்துலக மனித உரிமைகள் நாளாக அமைவதும் இங்கு குறிப்பிடதக்கது.

Leave a Reply