
இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது
இந்த காரசட்னிக்கு எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு உங்களுக்கே தெரியாது.அம்புட்டு சுவையாக இருக்கும் .ஒருமுறை செஞ்சு பாருங்க மக்களே .
இந்த கார சட்னி செய்வது எப்படி ..?
கார சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
சுவையான காரச்சட்னி செய்முறை ஒன்று .
காஞ்ச மிளகாய் நான்கு , காஸ்மீர் மிளகாய் 3 ,வெள்ளம் சின்ன கட்டி ,சீரகம் ,உப்பு ,100 கிராம் சின்ன வெங்காயம் ,ஐந்து பல்லு பூண்டு ,பொடியாக வெட்டிய இரண்டு தக்காளி .ஒரு பெரிய வெங்காயம் .எல்லாத்தையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க .
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை போட்டு தாளித்து எடுங்க .அரைத்து வைத்த பேஸ்டை போட்டு கலக்கி எடுங்க ,ஐந்து நிமிடம் மூடி போட்டு மூடி வைத்து எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வந்ததும் எடுத்திடுங்க
அவ்வளவு தாங்க சூப்பரான கார சட்னி ரெடியாடிச்சு ,இதனை இப்போ சாதம் ,தோசை,இட்லி கூட சாப்பிட்டு பாருங்க செமை சுவையாக இருக்கும் .