
இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாவனையில் இருந்து நீக்கிய சில ரயில் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இணக்கம் வௌியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நீக்கப்பட்ட ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு
அந்த ரயில் இயந்திரங்கள் இந்த நாட்டிற்கு பொருத்தமானதா என்பதை கண்டறியும் வகையில் தொழில்நுட்ப குழுவை எதிர்காலத்தில் இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பின்னரே அந்த இயந்திரங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.