
இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
கத்தி வாய் அழுதாலும்
கை கட்டி நின்றாலும்
பொத்தி வாய் இருந்தாலும்
பொறுக்கலையே பொறுக்கலையே
சத்தி வாய் வயிறோடும்
சாகாத வாயதோடும்
நீள துயர் தோய்ந்து
நீளம் எது போவதுவோ
துடிக்காத இதயமும்
துயர் அறியா பேனையும்
இருந்தென்ன வாழ்ந்தென்ன
இருந்தென்ன வாழ்ந்தென்ன
உலக சட்டத்தின்
உவமானம் இதுவென்றால்
தமிழனுக்கு அவமானம்
தலை குனிகிறேன்
நிறையாத வயிறோடு
நீளம் நடக்கின்ற
கண்ணீர் துளிகளின்
கால் தடம் பாராய்
சொந்த நிலம் பறித்து
சோகத்தை நீயளிக்க
வெந்து நான் பார்க்கவோ
வேதனை சேர்க்கவோ
என் துயரை நீ பார்த்து
ஏளனமாய் சிரி
உன் துயரை நான் பார்த்து
உனக்காய் அழுவேன்
அடங்காத குணத்தோடு
அகிலத்தை ஆள்கின்ற
விளங்காத வாய்களின்
விலாசம் இதுவோ ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 7-11-2023
பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு
- கலங்காதே மனமே
- இதயம் உன்னை தேடுதே
- பிரம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- வந்து விடு
- இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
- இன்றைய பாலஸ்தீனம்
- கண்ணீர் அஞ்சலி
- உன் நிலை என்ன
- இன்று போல் என்றும் வாழ்ந்திடு
- உன்னால் துடிக்கிறோம்
- மகிழ்வாய் இருக்க விழித்து கொள்
- இறைவனை தேடு
- கலங்காதே ஓடு
- காதல் செய்வோம் வா|காதல் கவிதைகள் |காதல் சோக கவிதை
- கண்ணீர் துடை வெல்வாய் |சோக கவிதைகள் | காதல் சோக கவிதை