
இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் சாப்பிடவல்ல கிரேவி – SAMAYAL TAMIL
இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன், வீட்டில நாம சாப்பிட வல்ல கிரேவி .
சோயா மீட் கிரேவி இப்படி செஞ்சு சாப்பிட்டு இருக்கிறீங்களா …?
இல்லையா ..? கவலை விடுங்க .இப்பொழுது நாம் அது எப்படி சமையல் செய்து கொள்வது என்பதை பார்க்கலாம் வாங்க ..
இந்த சோயா மீட் கிரேவி சமையல் செய்வது எப்படி ..?
இப்போ அடுப்பில சட்டியை வையுங்க ,உள்ளி இஞ்சி, சின்ன வெங்காயம் ,இரண்டு தக்காளி போடுங்க .
கூடவே சீரகம் ,மிளகும் ,கடுகு, கரம்பு, நச்சத்திர சோம்பு சேர்த்து, அரையுங்க .
இது கூட பிரிஞ்சி இலை மற்றும் ஒரு துண்டு பட்டையும் சேர்த்திடுங்க.
எல்லாம் சேர்த்து போட்டு அப்டியே மெல்லிய சூட்டுடன் வறுத்து கொண்டு இருங்க .
இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் சாப்பிடவல்ல கிரேவி – SAMAYAL TAMIL
தக்காளி முழுதாக போட்டமைக்கு காரணம், ஏன் என்றால் ,அதில் உள்ள தண்ணி தண்மை ,ஏனைய பொருட்களை முறையாக வேகா விடாது .
அது தான் முழுமையான தக்காளி இதுபோல் போட்டு வதக்குங்க .
சோயா மீட்டை ஊரவைச்சு எடுத்து பிறிதொரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்க .
இப்போ நாம் சமையலில் வறுத்த எல்லாத்தையும் ,மிக்சியில் போட்டு அரையுங்க .
தண்ணி முதல் ஊற்றாதீங்க . அரைத்த பின்னர் முந்திரி பருப்பு போடுங்க .
அப்புறம் குக்கர் சூடாக்காகி அதில் ,மூன்று கரண்டி எண்ணெய் ,நெய் சேர்த்திடுங்க .
ஏலக்காய் பூண்டு ,பட்டை ,சோம்பு என்பனவும் சேர்த்து பொரியுங்க ,அப்புறம் புதினா கொத்தமல்லி , கருவேப்பிலை சேர்த்து அதை பெரிய விடுங்க..
அதற்கு பிறகு முந்திரி பருப்பும் போடுங்க.
இப்ப வெட்டிய சின்ன வெங்காயம் போட்டு வறுங்க , அப்புறம் உப்பு போடுங்க.
அதற்கு பிறகு தயரான சோயா மீட்டை போட்டு வதக்குங்க .
அதோட அதற்கு ஏற்ப தூள் போடுங்க ,அப்புறம் மஞ்சள் தூள் , கரம் மசாலா , மல்லி தூளும் போட்டு சேருங்க.
இதெல்லாம் சேர்ந்த பின்னர், அதை எல்லாம் சேர்த்து வறுத்திடுங்க .
அரைச்சு வைத்த பொடியை போட்டு கலக்குங்க .அப்புறம் தேவையான தூளை போட்டு கலக்குங்க
தண்ணியை விட்டு கலக்குங்க .
குக்கரில் மூடியை போட்டு மூடிட்டு நான்கு நிமிடம் பின்னர் எடுங்க .
இப்போதே செமையாக கிரேவி ரெடியாச்சு
இந்த கிரேவி இட்லீ தோசை சப்பாத்தி சோறுடன் கலந்து சாப்பிடுங்க .
இப்போ சொல்லுங்க சோயா மீட் கிரேவி எப்படி இருக்கு .
இது தாங்க மேட்டர் ,சாப்பிட வந்திட்டா சமையலை கடினமாக பார்க்க கூடாதுங்க.
- இட்லி தோசை சப்பாத்தி பரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள பிளைன் குருமா
- சட்டுனு 5 நிமிடத்தில் ஒரு மோர் குழம்பு
- இட்லி தோசைக்கு பதிலாக முற்றிலும் புதிய சுவையில் இப்படி செய்ங்க
- இட்லி தோசை மாவு இல்லா நேரத்தில இப்படி செய்ங்க
- ரவையில் அட்டகாசமான சுவையில் ஸ்வீட் ஸ்நாக்ஸ்
- கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
- இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி
- பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க
- சிக்கன் பிரியாணி சுவையாக செய்வது எப்படி
- சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க
- சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க
- செட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Chukka | How To Make Chettinad Chicken Curry
- வீட்ல காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க| 5 Minute Lunch Recipes
- ஒரே மாவில் மொறுமொறு தோசை|பஞ்சு போல இட்லி | Crispy Dosa | Sponge Idli |Idli Dosa Batter in Tami
- மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney