இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்

இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்
Spread the love

இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்

லெபனானில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, மிரிஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக, ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய இலங்கை பெண்

லெபனானில் உள்ள பெரூப் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இலங்கை பெண் உள்ளிட்ட 5 பேர் சிக்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெண் கம்பஹா, மிரிஸ்வத்தையில் வசிக்கும் 65 வயதுடையவர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தூதரகத்திடம் இருந்து தகவல்

கிடைத்தவுடன், உரிய தரப்பினருக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.” என ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.