இசைக்கு இன்று பிறந்த நாள்

இசைக்கு இன்று பிறந்த நாள்

இசைக்கு இன்று பிறந்த நாள்

ஈழம் வாழ எங்களுக்கு
இசை பாடினான்
இறுதி வரை எங்களுக்காய்
உயிர் ஆகினான்

மூச்சடங்கும் வரை எமக்காய்
முன் நிற்பவன்
முன்னே பல தடை வந்தும்
முயல் போல பாய்பவன்

ஆழம் மரமாகி எமக்கு
நிழல் தந்தவன்
அண்ணனவன் அருகிருந்து
ஆசி பெற்றவன்

ஈழம் ஆளும் பொழுது
என்னை ஏற்றவன்
இசை பாடி எனக்கு
உயிர் கொடுத்தவன்

மாலை போட்டு என்னை
மனம் தரித்தவன் -செல்லப்பா
அறம் பலகூறி என்னை
ஆளாக்கி வைத்தவன்

இன்று உந்தன் நாளிலே
இதயமதால் பாடுகிறேன்
இன்று போல என்றும் வாழ
இறைவனிடம் வேண்டுகிறேன் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-04-2023
தமிழீழ தேசிய பாடகர் மாமனிதர் தேனிசை செல்லப்பா ஐயா பிறந்த நாள் வாழ்த்து பா