ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு

தேர்தலுக்கு பணம் இல்லை ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய ரணில்| இலங்கை செய்திகள்
Spread the love

ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு

ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது ஆளும் கட்சியின் பிரதம கொறாடா காரியாலயம். இது தொடர்பில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சகலருக்கும் வட்ஸ்அ​ப் ஊடாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த கட்டுப்பாட்டின் பிரகாரம், கொழும்புக்கு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், உரிய காரணங்கள் எவையும் அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்படவில்லை.

கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில், அரசாங்க அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கொழும்பில் தங்கியிருக்குமாறு கூறப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியினருக்கு அதிரடி கட்டுப்பாடு

இதேவேளை, இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசர தேவையாக கருதி பாராளுமன்றத்தை எதிர்வரும் சனிக்கிழமை (01) கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆளும் கட்சி அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கக் கட்சி பிரதம அமைப்பாளர் அலுவலகம் தமக்கு அறிவித்துள்ளது.

லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு வந்ததையடுத்து, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது