ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Spread the love

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.