ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை

திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்

ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரேவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (26) இரவு இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹிரேவத்த கடற்கரைக்கு அருகில் மேலும் இருவருடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, ​​அந்த இடத்திற்கு வந்த மற்றொரு நபர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், குறித்த இடத்திற்கு வந்த நபர் மது அருந்திக்கொண்டிருந்த நபரை கத்தியால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது