அரை சொகுசு பேருந்து தடை: பயணிகளுக்கு கிடைத்த வெற்றி

சீனாவினால் இலங்கைக்கு மருத்துவ ஆய்வுகூட பேரூந்துகள் கையளிப்பு

அரை சொகுசு பேருந்து தடை: பயணிகளுக்கு கிடைத்த வெற்றி

பயணிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளான மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையாக இயங்கி வந்த அரை சொகுசு பஸ் சேவையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது. .

2018 ஆம் ஆண்டு முதல் பயணிகளின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அரை சொகுசு பஸ் சேவையை இரத்து செய்ய பல தடவைகள் முயற்சித்த போதிலும், போக்குவரத்து மாபியாக்களின் செல்வாக்கு காரணமாக அந்த தீர்மானங்களை இரத்து செய்ய வேண்டியிருந்தது.

ஆனால் இம்முறை போக்குவரத்து மாஃபியாவின் செல்வாக்கிற்கு அடிபணியாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்காக போக்குவரத்து அமைச்சுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.