
அம்மன் ஆலயத்தை அடித்து நொறுக்கிய யானைகள்
அம்மன் ஆலயமான நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தை ,யானைகள் அடித்து நொறுக்கிய சம்பவம், பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .
கடந்த தினம் இரவு நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் நுழைந்த ,ஐந்து யானைகள் ,அந்த ஆலய மதில்களை உடைத்து ,களஞ்சிய சாலையில் இருந்த அரிசியை எடுத்து உட்க்கொண்டுள்ளனர் .
மேலும் அந்த ஆலயத்தில் நின்ற மிக பெரும் மாமர கிளைகளை உடைத்து இருந்துள்ளது .
யானைகள் புரிந்த அட்டகாச தாக்குதலில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம் முற்றாக சேதமடைந்துள்ளது .
காவலாளி அங்கிருந்த பொழுதும் யானைகளின் தாக்குதலின் பொழுது அவர் அச்ச முற்ற நிலையில் ,யானையை விரட்டது தன்னை பாதுகாத்து கொண்டார் என ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய குழு தெரிவித்துள்ளது .