அமெரிக்க தூதுவர் வருகிறார்

அமெரிக்க தூதுவர் வருகிறார்
Spread the love

அமெரிக்க தூதுவர் வருகிறார்

எதிர்வரும் 20 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள அமெரிக்காவின் இணையவெளி மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர் நதானியல் சீ ஃபிக், அரச மற்றும் தனியார் துறையின் பிரதிநிதிகளுடன் சந்திப்பில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதுவர் வருகிறார்

சைபர் பாதுகாப்பு, இணையவெளி சுதந்திரம், தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் என்பன குறித்து கொழும்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை அவர் முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பெங்களூரில் நடைபெறும் ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்களின் கூட்டத்தில் அமெரிக்க தலைமை பிரதிநிதியாக கலந்துகொள்வதற்கா இந்தியாவுக்கு வியாழக்கிழமை (17) விஜயம் செய்துள்ள அவர், 20 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.