
அமெரிக்காவில் இடிந்து வீழ்ந்த திரை அரங்கு கூரை ஒருவர் மரணம் 28 பேர் காயம்
அமெரிக்கா இல்லினாய்ஸ், பெல்விடேரில் உள்ள அப்பல்லோ
தியேட்டரில் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியும் , 28 பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கலீல் – ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .
பணியாளர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட சுமார் 260 பேர்,
ஹெவி மெட்டல் இசை நிகழ்ச்சியை நடத்தும் இடத்திற்குள் இருந்ததாக,
பெல்விடேர் தீயணைப்புத் தலைவர் ஷான் ஷாடில் தெரிவித்தார்.
கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
இருப்பினும் சம்பவ தினம் இரவு 7:45 மணிக்கு ஒரு சூறாவளி எச்சரிக்கை குறித்து,தேசிய வானிலை சேவை அறிவுறுத்தல் விடுக்க பட்டிருந்ததாக தெரிவிக்க படுகிறது .