அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு

உக்கிரைனில் ரஷ்யா தோற்கும் அமெரிக்கா புற்றினுக்கு எதிராக போர் குரல்| உலக செய்திகள்

அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கூடிய வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக, குறித்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களையும் வெளிப்படைத் தன்மையுடனும் ஒப்பீட்டுத் தன்மையுடனும் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்க திறைசேரி செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத் திட்டத்திற்கான அனைத்து நிபந்தனைகளையும் இலங்கை தற்போது பூர்த்தி செய்துள்ளதுடன், இந்த மாதத்துக்குள் கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது