அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Spread the love

அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
அனுஷ்கா


யோகா ஆசிரியையாக இருந்த அனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில்

65 படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் அனைத்து பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார். உடல் எடை கூடி பட வாய்ப்புகள் குறைந்தாலும் அனுஷ்கா மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. இந்த நிலையில்

அனுஷ்காவின் சொத்து மதிப்பு இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அவருக்கு ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அனுஷ்கா

ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் அனுஷ்காவுக்கு பல சொகுசு பங்களா வீடுகள் உள்ளன. ரியல் எஸ்டேட் துறையிலும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். பி.எம்.டபுள்யு, ஆடி போன்ற விலை

உயர்ந்த சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார். ஏழைகளுக்கு உதவ அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகளும் வழங்கி வருகிறார். அனுஷ்காவின் தற்போதைய மாத வருவாயை கணக்கிடும்போது அடுத்த ஆண்டில் சொத்து மதிப்பு இன்னும் கூடும் என்கின்றனர்.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply