அதை நம்பாதீங்க கதறும் நடிகை

Spread the love

அதை நம்பாதீங்க கதறும் நடிகை

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளி, தன்னை பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

யாரும் நம்ப வேண்டாம்… அபர்ணா பாலமுரளி கோபம்
அபர்ணா பாலமுரளி


சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி. சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக வந்தார். 8 தோட்டாக்கள் படத்திலும்

நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அபர்ணா பாலமுரளியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும், உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

அபர்ணா பாலமுரளி

இதனால் நடிகர்- நடிகைகள் பலரும் அவரை தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரிக்க தொடங்கினர். ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவுகள்

வெளியிட்டனர். உடல்நிலை வதந்திக்கு அபர்ணா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது “நான் நலமாக இருக்கிறேன். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். உடல்நிலை பற்றி பரவி

வரும் தகவல் உண்மையல்ல, அதை யாரும் நம்ப வேண்டாம்” என்று கோபமாக தெரிவித்து உள்ளார்.

    Leave a Reply