அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
Spread the love

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லியவத்தை பாலத்திற்கு அருகில் உள்ள ஹெமில்டன் கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், 5 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் எனவும், பழுப்பு நிற சாரம் மற்றும் வெள்ளை நிற கை நீண்ட சட்டை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.