அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் குடிநீர் வசதி

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் குடிநீர் வசதி
Spread the love

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் குடிநீர் வசதி

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் கிளி/மலையாளபுரம் திருவள்ளுவர் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக

அமைக்கப்பட்ட குடிநீர்க் கிணறும் அதனுடன் இணைந்த குடிநீர் வழங்கல் கட்டமைப்பும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மாணவர்களின் பயன்பாட்டுக்கு திங்கட்கிழமை (23) கையளிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கைக்கு அமைவாக, நியூசிலாந்தில் வசிக்கும் அரியதாஸ் செல்வதாஸ்

அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் குடிநீர் வசதி

எனும் நன்கொடையாளரின் நிதிப்பங்களிப்பில், அவரது தாயாரான அமரர்.மேரிரெஜினா அரியதாஸ் ஞாபகார்த்தமாக இக் குடிநீர்க்கிணறு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறீதரன் எம்.பியிடம், பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஒலிபெருக்கி வசதியையும்,

சுற்று வேலி அமைக்கும் பணிகளையும் காலக்கிரமத்தில் மேற்கொள்வதாக எம்.பி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது