அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா

Spread the love

அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா

ரஜினிகாந்த்-அஜித்தை சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “மங்காத்தா” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மங்காத்தா 2-ஆம் பாகம்

எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.

அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா

இதைத்தொடர்ந்து, அண்மையில் அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது

எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலானது. இந்த சந்திப்பானது மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் ரஜினி, அஜித் சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து அவர்களின்

கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த சந்திப்பானது உண்மையல்ல என்றும் ரஜினியை அஜித் சந்தித்தால் எப்படி


இருக்கும் என்று ரசிகர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    Leave a Reply