அசானிக்காக உள்ளம் திறந்த மக்கள் குரல்கள்
ஒத்த ரூபா இல்லா
ஓடி வந்தாயே – உன்
ஓடிந்தோடும் கண்ணீருக்கு
பரிசு ஏன் தாயே
கத்தும் கடல் கிழித்தெறிந்து
கரை வந்தாயே – மேடை
தட்டி தாளம் போட்டு
தாயே உன்னை பாடியதே
கொட்டி பகிர்ந்த அன்பின் முன்னால்
கொடும் துயரும் பறந்ததே
கட்டி தழுவி உன்னை
கரங்கள் கை கோர்த்ததே
எங்களது பிள்ளை என்றே -தமிழ்
எழுந்து நிற்கு தம்மா
என்றும் உன்னை கைவிடார்
எண்ணி கொள்ளம்மா
கனவு தாங்கி எழுந்தவளே
கண்ணீர் துடையம்மா
கடவுளானார் உன்னை காப்பர்
கண்ணே பாடம்மா
அழுவதற்கு மட்டுமா கண்கள்
இல்லை இல்லை அம்மா – நீ
ஆடி ஆடி பாட வேண்டும்
ஆடி பாடம்மா
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-008-2023
அசானியின் மறுபக்கம் இது தான் ,மக்கள் அவரை நம்பியதற்கு அவர் செய்த
செயல் இது தான் , உள்ளம் திறந்த மக்கள் குரல்கள் ,
இப்படித்தான் இதை பார்த்தல் நீங்களும் சொல்வீர்கள்